மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற போராட்டம் கலவரமாகிய பின் செய்தி சேகரிக்கச்சென்ற சுமேதா சஞ்சீவ உட்பட பல ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சஞ்சீவவை பொலிஸ் நிலையத்தில் பார்வையிட்டார்கள்.
அதன பின்னர் பொலிஸாரால் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார்கள்.
எனினும் காயமடைந்த ஊடகவியலாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கோரப்பட்ட போதிலும், பொலிஸார் அவரை பஸ்ஸில் ஏற்றி நீதிமன்றில் முற்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.