மேலும் 5 குடும்பத்தை சேர்ந்த 19 இலங்கை அகதிகள் படகு மூலம் இராமேஸ்வரம் சென்றடைந்தனர்!

Date:

(Photo: என். லோகதயாளன்)

நாட்டில் நிலவும் தொடர் போராட்டங்கள் மற்றும் பணவீக்கத்திற்கு மத்தியில் நாட்டில் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்துள்ள நிலையில் மேலும் 19 இலங்கை பிரஜைகள் இன்று காலை மீன்பிடி படகுகள் மூலம் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தை சென்றடைந்தனர்.

ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் நேற்று இரவு மன்னார் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்கள் திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்.
குறித்த அகதிகள் தமிழக பொலிஸாரால் மீட்கப்பட்டு தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மாநில அதிகாரிகளால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு காரணமாக இலங்கை அகதிகள் குழுவொன்று கடந்த வாரங்களில் இந்தியக் கடற்கரைக்கு சென்ற மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

யுத்தம் காரணமாக தமழ்நாட்டில் பல தசாப்தங்களாக தங்குமிட முகாம்களில் வாடித் தவித்துஇலங்கை திரும்பிய நான்கு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட வடக்கைச் சேர்ந்த இலங்கையர்கள், வாழ்க்கைச் செலவை தாங்க முடியாமல் மீண்டும் நாடு திரும்புவது குறித்து ஆலோசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே போல் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...