ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளியால் 10 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மனிந்த யாப்பா அபேவர்த்தன ஒத்திவைத்தார்.
இன்று காலை பாராளுமன்றம் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர், நேற்று ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சபையின் அடிப்படை பணிகளை முன்னெடுக்க இடமளிக்குமாறு சபாநாயகர் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார். இவ்வேளையில் சபையில் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், சபை நடவடிக்கைகளை சபாநாயகர் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.