இன்று முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று நண்பகல் ஒரு மணி முதல் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளுக்காக 1000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்காக 1500 ரூபாவிற்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
எனினும், பஸ், லொறி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகளில் வரையறை கிடையாது என பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.