நிட்டம்புவ கிரிந்திவௌ பாதையில் உனககதெனிய பகுதியில் இன்று (13) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 43 வயதுடைய முஹம்மத் சபீக் என்பவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது பஸ் ஒன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த நிலையில், வந்துகொண்டிருந்த பஸ்சில் மோதியுள்ளது.
இதில், முஹம்மத் சபீக் வீதியில் விழுந்து பஸ்சின் சக்கரத்திற்குள் சிக்குண்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள்ளார்.
03 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் நிட்டம்புவ, ககட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.