கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டம் இன்று ( சனிக்கிழமை) 8 ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள், யுவதிகள், முதியவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் ‘கோட்டா கோ கம’ என்ற பெயர்ப் பலகையைக் காட்சிப்படுத்தியுள்ள போராட்டக்காரர்கள் அங்கு கூடாரங்களை அமைத்து தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று போராட்டம் களத்துக்கு ஆதிவாசிகள் குழுவொன்றும் வருகை தந்ததோடு ஆர்ப்பாட்டத்திற்கு பெருந்தொகையான மக்கள் வந்திருந்தனர்.
எவ்வாறாயினும், ஏப்ரல் 18 ஆம் திகதிக்குப் பிறகு அவர்களை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.