ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ‘பதவி விலகக் கூடாது’ என தங்காலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந் நிலையில், தற்போது ஜனாதிபதி பதவி விலக வேண்டாம் என்று கூறி அவரது ஆதரவாளர்கள் தங்காலை மற்றும் கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் பங்கேற்றவர்கள் ‘WeWantGota’ என்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 8ஆம் திகதி கொழும்பில் “எங்களுக்கு கோட்டா வேண்டும்” என ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கு ஆதரவாக நடத்தப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.