அதிக மழை வீழ்ச்சியால் நீர் மின்சக்தியை அதிகரிக்க முடியும்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Date:

நாடு முழுவதும் பெய்து வரும் கடும் மழையினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நீர் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால், நீர் மின் உற்பத்திக்கு நல்லதென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமீப காலமாக, நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததுடன், நீர்மின் உற்பத்தி தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...