அனைவரையும் வியக்கவைத்த 6 வயது சிறுமியின் அற்புதமான குர்ஆன் பாராயணம்

Date:

இலங்கையை சேர்ந்த 6 வயது சிறுமியொருவர் அல் குர்ஆனின் வசனங்களை மிகத்தெளிவாக மனனம் செய்து பாராயணம் செய்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சவூதி அரேபியாவின் பிரபலமான தொலைக்காட்சியொன்றில் இடம்பெறும் போட்டி நிகழ்விலே அவர் இவ்வாறு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஹிஸ்மி ஹாஜி இஸ்மாயில் என்ற 6 வயது சிறுமி குர் ஆனின் வசனங்களை மிகத்தெளிவான முறையில் மனனம் செய்து ஓதியுள்ளார்.

இந்நிலையில் குறித்த போட்டி நிகழ்வில் நடுவராக இருந்த இஸ்லாமிய அறிஞர் குழாம் சிறுமியை பாராட்டியுள்ளார்கள்.

இதன்போது, இந்த சிறுமி குர்ஆன் ஓதும் அழகை பாராட்டமால் இருக்க முடியாது, ஆச்சரியமாகவுள்ளது அதேசமயம் இவரது திறமையை கண்டு அதிர்ச்சியாகவுமுள்ளது. எந்த விதமான எழுத்து பிழைகளுமின்றி உச்சரிப்பு பிழையுமின்றி 100 வீதம் மிகச் சரியாக ஓதியுள்ளார் எனவும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இதேவேளை ரமழான் மாதம் என்பது முஸ்லிம்களுடைய மிக முக்கிய மாதங்களில் ஒன்றாகும். எனவே இந்த மாதத்தில் தான் இறை மறை குர்ஆன் நூல் இறக்கியருளப்பட்டதாக முஸ்லிம்களால் நம்பப்படுகின்றது.

இந்த இறைமறை குர்ஆனின் போதனைகள் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்களால் மனதிலே இருக்கும் நிலையில், குறித்த சிறுமி மிகத்தெளிவாக மனப்பாடம் செய்து ஓதியமை விசேட அம்சமாகும்.

Popular

More like this
Related

ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடும் துருக்கி!

விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரின் சிதைவு என கருதப்படுவதிலிருந்து வெளிவரும்...

காற்று, மழையுடனான வானிலை தொடரும்!

தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக இலங்கையை ஊடறுப்பதனால் நிலவுகின்ற காற்றும் மழையுடனான...

ஈரான் ஜனாதிபதி நிலை என்ன? பதற்றத்தில் உலக நாடுகள்:

 ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில்,...

புத்தளத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: சமூக நல பணியாளர்கள் களத்தில்

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல...