தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி விளக்கம்!

Date:

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் புத்தசாசன புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவினால் (24) காலை பிரதம பீடாதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது.

எனினும், அந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் இன்னும் வெளியாகவில்லை. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்ப்பது தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்திருந்தனர்.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய பிரேரணையை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தனர்.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம்...

ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசி மரணம்: ஹெலிக்கொப்டரில் பயணித்த எல்லோரும் பலி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு...

ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இல்லை’: அரச ஊடகம் தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு...