கடந்த திங்கட்கிழமை (5) நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி, நிதியமைச்சர் என்ற வகையில் சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
நிதியமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழமை (6) இராஜினாமா செய்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே அலி சப்ரி நிதி அமைச்சராக தொடர்ந்து கடமையாற்றுவார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கான உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பான உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களுக்காக சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த வாரம் பயணிக்கவிருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்பு திங்கட்கிழமை (11) நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர் அலி சப்ரி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.