எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க, 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாடாளுமன்றம் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 வருடங்கள் கடந்துள்ளள நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சரி செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் இன்று (21) 1.30 மணிக்கு இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தை ஆரம்பித்த போது அறிவித்தார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாடாளுமன்ற விவகாரக் குழுவின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் கூறினார்.