எரிபொருள் விலையேற்றம்: நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Date:

எரிபொருள் வழங்கக் கோரியும், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராகவும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய காலி, மாத்தறை, கம்பளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, சிலாபம், ஹிங்குராங்கொட, திகன, மத்துகம, அவிசாவளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எரிபொருள் கோரி போராட்டம் காரணமாக சிலாபம் – கொழும்பு வீதி காக்கப்பள்ளி மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அதேவேளை எரிபொருளை கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக மலையக ரயில் பாதை ரபுக்கன பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

மேலும், கண்டியில் இருந்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயங்காமல் உள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று நள்ளிரவு முதல் ஆமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அதன்படி 92 ஒக்டோன் பெற்றோல் 84ரூபாவினாலும் 95 ஒக்டோன் பெற்றோல் 90 ரூபாவினாலும் ஓடோ டீசல் 113 ரூபாவினாலும் சூப்பர் டீசல் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்காரணமாகவே மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...