காலி முகத்திடலில் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞன் உயிரிழப்பு!

Date:

அரசாங்கத்திற்கு எதிராகவும், ஜனாதிபதிக்கு எதிராகவும் காலி முகத்திடலில் நடத்தப்படும் போராட்டத்தில் கலந்துக்கொண்ட கலைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

50 வயதாக ரெப் இசை கலைஞரான ஷிராஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட நிலையில் நேற்றிரவு 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மாரடைப்பு  மரணத்திற்கான காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளது. இதேவேளை இலங்கை கலைஞர்கள் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...

மக்களின் அச்சத்தை போக்குவதற்கு துரித எரிபொருள் விநியோகங்கள்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள வீணான அச்சத்தை போக்கும் வகையில், எரிபொருள் விநியோகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய...

இன்று ஆண்டின் முதல் சந்திர கிரகணம்!

வானில் சூரியன், பூமி, நிலவு ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் வரும்போது,...