சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான இலங்கைக் குழு (நாளை) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை செல்லவுள்ளது.
அதேநேரம், ஏப்ரல் 19 முதல் 24 வரை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
நிதி அமைச்சருடன் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் சென்றுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குவார்.