சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் சஜித் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தை பொலிஸார் தடுத்துள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை மீறிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க தயாராக இருந்த நிலையில், ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...