நாட்டில் பாரிய அரச எதிர்ப்பு நடவடிக்கையொன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக நம்மால் அறியக்கூடியதாக காணப்படுகின்றது
நடக்கவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்படாவிட்டால் அரசாங்கம் அதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமென்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒரு எல்லையுள்ளது. அந்த எல்லையை மீறி செயற்பட்டால் அதனை தடுப்பதற்கும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்துக்கு பொறுப்பு உள்ளது என தெரிவித்த அமைச்சர் ஜனநாயகத்தையும் ஜனாதிபதியையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே படையினரும் பொலிஸாரும் செயற்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் இல்லத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிக்க முற்பட்டபோது தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முழு நாட்டையும் வீழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அரசியல் அடிப்படைவாதிகளால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனநாயகத்தை தீ வைத்து சீர்குலைத்துவிட முடியாது.
நாட்டில் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஒரு முறைமையுள்ளது. ஜனநாயக ரீதியில் அது முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை மீறிச் செயற்பட்டால் அதற்கெதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.