பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சி!

Date:

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விற்பனைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடத்தை காட்டிலும், மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே இதற்கு பிரதான காரணமாகும் என கிம்புலாபிட்டியில் சிறிய அளவில் பட்டாசு மற்றும் கேளிக்கை வெடிபொருட்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணிகளால் பொதுமக்களின் பட்டாசு கொள்வனவு குறைவடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்களில், பலர் தற்போது தங்களது தொழிற்துறையை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

கடந்த காலங்களில் அதிகமானோர் பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபட்டனர். எனினும் தற்போது ஒரு சிலர் மாத்திரமே இந்த தொழிற்துறையை முன்னெடுப்பதாக சிறிய மற்றும் நடுத்தர பட்டாசு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...