பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை தற்காலிகமாக துருக்கி நீதிமன்றம், நிறுத்தி வைத்துள்ளது.
அதேநேரம், குறித்த வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அவர் செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களில் அரசாங்கத்தையும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் விமர்சித்தார்.
இதனால் அவருக்கு மிரட்டல் எழுந்தது. பின்னர் அவர் தனது சொந்த நாடான சவுதி அரேபியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்.
ஜமால் கசோகி தனது காதலியை கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்தார். அதனால் திருமணம் தொடர்பான ஆவணங்களை சேகரிக்க ஜமால் கசோகி துருக்கி சென்றபோது அங்குள்ள சவூதி அரேபிய தூதரகத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் மாயமானார்.
அப்போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்ததுடன் சவூதி அரசின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளதுடன் குற்றச்சாட்டை சவூதி தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில் சல்தான் உத்தரவின் பேரில் இந்தப்படுகொலை செய்யப்பட்டதாக துருக்கி குற்றம்சாட்டி வந்தது.
இது தொடர்பாக சவூதி அரேபியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு இஸ்தான்புல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கை சவூதி அரேபியாவுக்கு மாற்ற துருக்கி முடிவு செய்தது. அவ்வாறு செய்தால் உண்மைக் குற்றவாளிகள் காப்பற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கையையும் மீறி துருக்கி இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வரும் துருக்கி கஷோகி கொலை வழக்கால் சவூதியுடானான உறவு சீர்கெடுவதை விரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில் கஷோகி கொலை வழக்கை சவூதிக்கு மாற்றுவதற்கு ஏதுவாக அந்த வழக்கின் விசாரணையை இஸ்தான்புல் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இதேவேளை, இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கை சவூதி அரேபியாவிடம் ஒப்படைத்தால் சந்தேக நபர் தப்பித்து விடுவார் என்று தெரிவித்தனர்.
மற்றும் சொந்த நாட்டில் செயல்முறை நன்றாக இல்லை. எனவே, இந்த வழக்கை எக்காரணம் கொண்டும் சவூதி அரேபியாவுக்கு மாற்றக் கூடாது.