‘பாராளுமன்றத்தை கலைக்க அறிவுறுத்த முடியாது’ :பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Date:

நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்த பாகிஸ்தான் துணை சபாநாயகர் காசிம் சூரியின் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிவித்தது.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.

இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அந்நாட்டு எதிர்க்கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது அதிபர் ஆரிப் ஆல்வியின் உத்தரவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

பிரதமர் இம்ரான் கான் அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர் என்றும், அதனால் பாராளுமன்ற சபைகளை கலைக்குமாறு ஆரிப் அல்விக்கு அவர் அறிவுறுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

மேலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு துணை சபாநாயகரால் ரத்துச் செய்யப்பட்டது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.

இதையடுதது ஏப்ரல் 9 ஆம் திகதி பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அனுமதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...