பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் இலங்கைப் பிரஜையான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தினால் நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.
அதன்படி, 06 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனையும் 07 சந்தேகநபர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் சியல்கோட் நகரில் நிறுவனடிமான்றில் பணியாற்றிவந்த பிரியந்த குமார 2021 டிசம்பர் 3 ஆம் திகதி வன்முறைக்கும்பலால் அடித்தும் எரித்தும் படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து அந்தச்சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
அதன்படி அவர்களுக்கு எதிரான வழக்கில் 13 பேர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் புரிந்த குற்றங்களின் அடிப்படையில் 6 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இதேவேளை பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 6 பேரும் ரூ. 2 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அவர்கள் அனைவரும் அபராதமாக தலா ரூ.2 இலட்சம் செலுத்த வேண்டும் என்பதுடன் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு 2 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அத்தோடு ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 9 சிறார்கள் உட்பட 72 பேருக்கு தலா இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து பாகிஜ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.