ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி நாட்டிற்காக வீதியில் இறங்கியவர்கள் தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றும் முயற்சியாக கொழும்பு காலி முகத்திடலில் போராட்டக் களமாக மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்காக நாடு முழுவதிலுமிருந்து மக்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
ஏப்ரல் மாதம் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மும்முரமாக தயாராகி வந்த மக்கள், இம்முறை வித்தியாசமான களத்திற்கு தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டுள்ளார்கள்.
தற்போதைய நெருக்கடியால், இம்முறை புத்தாண்டு உணவுகளின் நறுமணத்தை சுவாசிப்பது கனவாகிவிட்டது.
நாட்டு அரசாங்கம் வெளியேறும் வரை நாமும் செல்ல மாட்டோம் என்ற நோக்கத்தில் தற்போது காலி முகத்திடல் வழமைக்கு மாறாக காட்சியளிக்கின்றது.
இதை உறுதிப்படுத்தும் வகையில், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர முடிவு செய்துள்ளோம்.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக காலி முகத்திடலில் 3ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது.
ஜனாதிபதி பதவி விலகும் வரை வெளியேற மறுத்து காலி முகத்திடலில் கூடாரங்கள் அமைத்து பல ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர்.