‘போராட்டக்காரர்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டும்’ :பிரதமர்

Date:

ரம்புக்கனையில் நேற்று இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசனம் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கலைக்க பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதன்போது, ரம்புக்கனையில் இடம்பெற்ற அனர்த்தத்தைத் தொடர்ந்து தாம் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு எப்போதும் மிகுந்த மரியாதையுடன் சேவையாற்றும் இலங்கை பொலிஸாரால் கடுமையான, பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தான் நம்புவதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

மேலும், ‘போராட்டக்காரர்கள் தங்கள் குடியுரிமையில் சம மரியாதை மற்றும் மரியாதையுடன் ஈடுபட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்,’ என்று அவர் மேலும் கூறினார்

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...