‘மக்கள் கஷ்டங்களை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது’ : இராஜினாமா கடிதத்தில் ரொஷான் ரணசிங்க!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரது இராஜினாமா மே 01 முதல் அமலுக்கு வருகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ள நிலையில், ரொஷான் ரணசிங்கவின் பதவி விலகல் குறித்த அறிவிப்பானது அரசாங்கத்திற்கும் மேலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை அவர் ஜனாதிபதிக்கு வழங்கி இராஜினாமா கடிதத்தில்,

நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இந்த தருணத்தில், வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என நிமல் லான்சா தெரிவித்திருந்ததுடன், சிறப்புரிமை மற்றும் அதிகாரம் ஆகியவற்றை கடந்து தான் எப்போதும் மனசாட்சிக்கு கட்டுப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தமது பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதியிடம் முன்வைக்க கூட சந்தர்ப்பம் வழங்காமை குறித்து மிகுந்த வருத்தமடைவதாகவும் அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது: 7.50 இலட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு...