குரங்கு அம்மை நோய் இலங்கையிலும் பரவலாம்!: வைத்திய நிபுணர் தீபால் பெரேரா

Date:

ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்குஅம்மை நோய் இலங்கையிலும் பரவலாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, நாட்டில் இந்நோய் பரவியுள்ளதா என்பதை கண்டறியும் மரபணு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தொண்ணூற்று இரண்டு குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக ஆப்பிரிக்க பிராந்தியத்தில் உள்ளவர்களிடம் இருந்து இந்த நோய் பரவக்கூடும் என்றும் அவர் கூறினார்.

சீழ் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும் எனவும் அவ்வாறான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய உதவியை நாட வேண்டியது அவசியமானது எனவும் வைத்தியர் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பிள்ளைகளை தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பது முக்கியம் என தெரிவித்த விசேட வைத்தியர், அந்த பிள்ளைகளின் மனநலம் மற்றும் போசாக்கு விடயத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பெய்து வரும் கனமழையால் கிரகரி வாவியின் நீர்மட்டம் உயர்வு!

நுவரெலியா பகுதியில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக கிரகரி வாவியின் (Gregory...

அரச ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை – பிரதமர்!

அரச அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதியக் கொள்கையை நிலையான...

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

களு கங்கையின் குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய...

டிரம்ப்பிற்கு பலத்த அடி! சிஎன்என் உள்ளிட்ட ஊடகங்களின் தடையை நீக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சிஎன்என் (CNN), எம்.எஸ் நவ் (MS...