ஹர்த்தாலுக்கு ஆதரவாக இன்று குருநாகல் மாவட்ட கோபேகனே கொபேகனே பகுதியில் நடைபவனியும் எதிர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம், 74 ஆண்டுகால சாபத்திற்கு முடிவு கட்டுவோம் எனற பல்வேறு
கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கொபேகனே மக்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், வர்த்தகர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.