சுகாதாரம், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட 2000 தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன!

Date:

அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடு தழுவிய ஹர்த்தால் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்றவுள்ளதாக தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய சுகாதாரம், தபால், போக்குவரத்து, கல்வி உள்ளிட்ட பல முக்கிய தொழிற்சங்கங்களின் செயற்பாடுகள் இடம்பெறமாட்டாது அதன் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்று பாடசாலை நடவடிக்கைகள் இடம்பெறாது என்பதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று பாடசாலைக்கு வருவதில்லை என அதன் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பல அத்தியாவசிய சேவை வழங்குனர்களின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

குறுகிய அரசியல் நலன்களை முன்னிறுத்தி மக்களை சங்கடப்படுத்தும் நோக்கில் சில குழுக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் தாங்கள் இணையப் போவதில்லை என்றும், சேவை நடவடிக்கைகளைத் தொடர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, விமான நிலையத்தின் பிரமுகர் பிரிவு மற்றும் மக்கள் பாதையில் பயணிகளை சுத்தப்படுத்தும் பணியும் இன்று இடைநிறுத்தப்படும் என இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பேசிய சங்கத்தின் செயலாளர் ஜெயசிங்க பண்டார.

ஒரு நாள் சேவை உட்பட அனைத்து பொது சேவைகளும் இன்று இயங்காது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்தின் உள்ளக ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் இன்று இயங்காது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

உத்தேச முஸ்லிம் விவாகரத்து சட்ட சீர்திருத்தம் தொடர்பில் இலங்கை காதிமார் சம்மேளனத்தின் முன்மொழிவுகள்

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் (MMDA) முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்பாக...

மத்திய கிழக்கிற்கான விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த...

அமேசான் தரவு மையத்தில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!: டிஜிட்டல் சேவைகள் பாதிப்பு!

அமேசான் தரவு மையத்தில் ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலால் வங்கி சேவைகள்...

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

இலங்கை முழுவதும் பல நகர்ப்புறங்களில் காற்றின் தரம் கடந்த 24 மணி...