‘நான் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை, சாணக்கியன் தம்மை பற்றி கூறிய கருத்துக்கள் தவறானவை’: ரணில்

Date:

தாம் ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இருந்ததில்லை என்றும், பிரபாகரனை தோற்கடிக்க ராஜபக்சக்கள் பிரபாகரனுடன் ‘அரட்டை’ செய்ததாகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம், ராஜபக்ச அணியில் இருப்பதாக பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும், மகிந்த ராஜபக்சவிடம் இருந்து பட்டிருப்பு அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டது தாம் அல்ல ராசமாணிக்கம் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்இராசமாணிக்கம் நேற்று (5) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாக இராசமாணிக்கம் தெரிவித்தார்.

இதனையடுத்து இராசமாணிக்கம் தம்மை பற்றி கூறிய கருத்துக்கள் தவறானவை 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்சவினால், ராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு பட்டிருப்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டதாக ரணில் சுட்டிக்காட்டினார்.

மேலும் மகிந்த ராஜபக்ச சரணம் கச்சாமி, பசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி என்று கூறுவது சிலருக்கு வழக்கமாக இருக்கலாம். எனினும் தாம் ஒருபோதும் ராஜபக்சர்களுக்காக உதவவில்லை என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...