‘ மகிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற மாட்டார்’ :நாமல்

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இன்னும் நாட்டை விட்டு செல்வில்லை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை மகிந்த தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக மாட்டார் எனவும், தனக்குப் பின்வருபவரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்க விரும்புவதாகவும் நாமல் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமரை வெளியே வருமாறு கோரி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமல் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளியானதையடுத்து போராட்டக்காரர்கள் கடற்படை தளத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...