மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பை வழங்கியிருந்தார்.
பாராத லக்ஷ்மன் பிரேமசந்திரன் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு 2021 ஜுன் 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்க்பட்டது.
இந்நிலையில் விடுதலையான துமிந்த வீடமைப்பு அதிகார சரபயின் தலைவராக பதவியேற்றார்.
இதனையடுத்து அவரின் பொதுமன்னிப்பை சவாலுக்குட்படுத்தி ஹிருணிகா உயர்நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்தார்.
அதன்படி அந்த தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டபோது துமிந்தவுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு இடை நிறுத்துவதாக அறிவித்தது.
இதேவேளை துமிந்த மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.