பெரஹெர மாவத்தையில் வைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது கல் வீசப்பட்டதில் அவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடனடியாக இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பொலிஸ் மா அதிபரை மீட்டு பொலிஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கொழும்பு – அலரி மாளிகைக்கு அண்மித்த பகுதியில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்துடன் வாகனத்தின் மீதும் தீ வைக்க முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு ‘நியூஸ் நவ்’ தளத்திற்கு தெரிவித்துள்ளது.