நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கான திகதியை நாளை சபாநாயகர் அறிவிப்பார்!

Date:

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை தீர்மானிக்கும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (9) முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சிங்கள ஊடகமொன்று கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது, இது தொடர்பில் நாளை விரிவாக கலந்துரையாடப்படும், எனவும் நாட்டின் பிரச்சினை மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

அத்தோடு நாளை நடைபெறும் கூட்டத்தின் பின்னர் சபாநாயகர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த உள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, ஹரீன் பெர்னாண்டோ மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் சார்ஜன்டை தாக்கி செங்கோலை பறிக்க முயற்சித்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான மற்றுமொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையையும் பிரதமர் அண்மையில் சபாநாயகரிடம் கையளித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...