முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு திரும்புவார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அவரது விலகல் நிரந்தரமாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது,’ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரது சேவையையும் உதவியையும் மீண்டும் நாட்டிற்கு பெறமுடியும் என் கருத்துப்படி, இந்த நேரத்தில் அனைவரும் ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்பதுடன் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.