ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் காயம்

Date:

சற்று முன்னர் ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரத்கம பிரதேச சபையின் தலைவர் டி. நிமாலின் வீட்டுக்கு முன்பாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் ரத்கம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னர் ரத்கம பிரதேச சபையின் தலைவர் டி. நிமாலின் வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

தேசிய இணையவழிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் நிலையம் ஆரம்பம்!

இணையவழித் தாக்குதல்கள் காரணமாக அரசாங்க நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் எதிர்கொள்ளும்...

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...