ஹர்த்தாலில் இணையும் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும்?: ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!

Date:

ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் குறைக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

ஹர்த்தால் போராட்டத்தில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே 2022 சம்பளம் குறைக்கப்படும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் கடித முறைமையினை பயன்படுத்தி பேஸ்புக்கில் பரப்பப்படும் அறிவிப்பு முற்றிலும் தவறானது என்று குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜனாதிபதி செயலகம் அவ்வாறானதொரு அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சுக்கு வழங்கவில்லை எனவும், இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...