69 வருடங்களின் பின் இடம்பெறும் மிகப்பெரிய ஹர்த்தால்!:வடக்கு – தெற்கில் போராட்டம் தீவிரம்

Date:

நாட்டில் பல பகுதிகளில் இன்றையதினம் ஹர்த்தால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சில கடைகள் மற்றும் வீடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.

தெற்கிலும் வடக்கிலும் ஹர்த்தால் தீவிரமடைந்துள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. ஹர்த்தாலுக்கு ஆதரவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஹர்த்தாலுக்கு பெருந்தோட்ட பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹர்த்தாலால் நுவரெலியாவில் தேயிலை கொழுந்து பறிப்பு மற்றும் மரக்கறி போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதுடன் களுத்துறை மாவட்டத்திலும் பல்வேறு கடைகள் மூடப்பட்டு வீடுகளில் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

கொழும்பில் கோட்டை புகையிரத நிலையத்தில் சுமார் ஒரு மணித்தியாலம் இரயில்கள் இயங்காத நிலையில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றது.

பல தொழிற்சங்கங்களால் தொடங்கப்பட்ட ஹர்த்தால் இயக்கம் தற்போது தீவிரமாக உள்ளது. இதனால் சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, தொழில் உள்ளிட்ட பல துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புகையிரத சேவை மிகக்குறைவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் சேவையில் இல்லை.

பல தனியார் பேருந்துகளும் இன்று சேவையில் ஈடுபடவில்லை. குணசிங்கபுர இலங்கை போக்குவரத்து சபை பிரதான பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், பஸ்கள் வழமை போன்று இயங்காததை காண முடிந்தது.

நாட்டில் இவ்வளவு பெரிய ஹர்த்தால் நடத்தப்பட்டு 69 ஆண்டுகள் ஆகின்றன. முன்னதாக, ஆகஸ்ட் 12, 1953 அன்று, இலங்கையில் நடந்த மாபெரும் ஹர்த்தால் பல பொதுமக்கள் உயிரிழப்புகளுடன் முடிவுக்கு வந்தது.

இவ்வாறான அழுத்தங்களினால் அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவியை இழந்ததாக வரலாற்று பதிவாகியுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் வெளியேறுமாறு வலியுறுத்தும் நோக்கில் இந்த ஹர்த்தால் பிரச்சாரம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...