HND மாணவர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை வீச்சு!!

Date:

உலக வர்த்தக மையத்திற்கு அருகே HND மாணவர் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் இன்று கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இவர்கள் கோட்டையில் உள்ள உலக வர்த்தக கட்டடத்திற்கு அருகில் உள்ள வீதி ஊடாக காலி முகத்திடல் பக்கம் செல்ல முயன்ற போது அற்த வீதியில் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை இடைநிலை டிப்ளோமா மாணவர் சம்மேளனத்திற்கு (SLFF) இன்று (21) பிற்பகல் கொழும்பு கோட்டை பிரிவில் உள்ள பல வீதிகள் மற்றும் அரச நிறுவனங்களில் பேரணி நடத்த தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சைத்யா வீதி, NSA சுற்றுவட்டத்திலிருந்து ஜனாதிபதி மாவத்தை, வங்கி மாவத்தை, சவுண்டர்ஸ் மாவத்தை, கிராண்ட் ஓரியன்டல் ஹோட்டலுக்கு அருகில் இருந்து பிரதான மாவத்தை, லேடியன் பாஸ்டியன் மாவத்தை, முதலிகே மாவத்தை, மருத்துவமனை வீதி, கெனல் வீதி உட்பட பகுதிகளில் பயணம் செய்ய நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், அரசு நிறுவனங்கள் அப்பகுதிக்குள் நுழையக் கூடாது, பணியில் இருக்கும் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது, இருவரையும் காயப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...