ஆயிஷாக்களின் இழப்பால் சமூகத்துக்கு கூற வரும் கதை என்ன?

Date:

போதைப்பொருள் வியாபாரிகளின் ஆட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலேயே அதிகமாக உணரப்பட காரணம் என்ன முஸ்லிம்களின் பலவீனமா? இல்லை திட்டமிடப்பட்ட சதியா?

தடுக்கவே முடியாதா? ஏன் முடியாது? நிச்சயம் முடியும்….. யாரால்?

1. சட்டத்தரணிகள் தேவை. குற்றவாளிகளுக்கெதிராக தராதரம் பார்க்காமல் சட்ட நடவடிக்கை எடுக்க.

2. சட்ட வைத்திய அதிகாரிகள் தேவை. சட்ட நடவடிக்கைக்குத் தேவையான சட்ட மருத்துவ உதவிக்கரம் புரிய.

3. மனோ தத்துவ வைத்திய நிபுணர்கள் அல்லது அதிகாரிகள் தேவை. பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் கவுன்சிலிங் செய்யவும்.

4. உலமாக்கள், பள்ளிவாசல் தலைவர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்புத் தேவை.

ஒவ்வொரு கிராமங்களில் அல்லது பிரதேசங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட தேசிய மட்ட சக்தியொன்று தேவை.

யார் பொருத்தம்? அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா?

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இந்த பணியை முன்னெடுக்க முன்வருமாக இருந்தால், ஒரு சட்ட வைத்தியராகவும் மனோவைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றிய எனது அனுபவத்தையும், ஒரு சட்டத்தரணியாகவும் வைத்தியராகவும் வழங்க தயாராக உள்ளேன்.

தேசிய மட்டத்திலான விழிப்புணர்வு, திட்டமிடல், ஒருங்கிணைந்த செயற்பாடு, ஒத்துழைப்புகள் அவசியம்.

என்னால் முடியுமான அளவு வைத்தியர்களையும் சட்டத்தரணிகளையும் மேலும் தேவைப்படும் அரிகாரிகளையும் அணுகி அவர்களின் ஒத்துழைப்புகளையும் பெற முடியும் என நம்புகிறேன்.

சமூக கரிசனை உள்ள ஒவ்வொருவரும் இவ்வாறு முன்வர முடியுமாக இருந்தால் எமது சமூகத்தில் உள்ள இளம் வயது சிறார்களையும் பாதிப்புக்குள்ளாகும் சமூக அங்கத்தவர்களையும் நிச்சயம் காப்பாற்ற முடியும் என நம்புகிறேன்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா இது சம்பந்தமாக தேசிய மட்ட முயற்சிக்கு தலைமை தாங்கி உதவ முன்வருமா?

DR Y.L.M.YOOSUFF
MBBS (Col), MSc (R)
DBM, DMKT
LLB, LLM (Col), Attorney At Law

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...