நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை 5.30 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக ஊடக அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளதுடன், பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இந்நிலையில், இது தொடர்பாக விடயங்கள் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.