‘நந்தேட ஜங்கியக்’: பாராளுமன்றம் அருகே உள்ளாடை போராட்டம்!

Date:

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு தடுப்புகளில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘கோட்டகோகம மற்றும் ஹொரா கோ காம’ எதிர்ப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நந்தேட ஜங்கியக்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளாடைகளை பொலிஸ் தடுப்புகளில் தொங்கவிட்டு சர்வதேச உள்ளாடைகள் இல்லாத தினம் 2022 ஐ கொண்டாடினர்.

‘நந்தேட ஜங்கியக்’ எனும் தொனிப்பொருள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடுவதாகும்.

அதேவேளை “இதுதான் எமக்கு மிச்சம்” எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற நுழைவாயில் ‘ஹொரா கோ காம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் சிலர் உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் காண முடிந்தது.

உள்ளாடைகளைக் கூட ஆடம்பரப் பொருளாக்கி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பறித்த ஆட்சியாளருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...