புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் சிறப்பாக அமையும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவரது நியமனத்திற்குப் பிறகு இந்தியா-இலங்கை உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் நெருக்கடியான பொருளாதாரத்தை மேம்படுத்தும் சவாலை தான் ஏற்றுக்கொண்டதாகவும் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான சவாலை நான் ஏற்றுக்கொண்டேன், அதை நான் நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விக்கிரமசிங்கவின் நியமனத்திற்குப் பின்னர் இலங்கை மக்களுக்கு நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது.
‘இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மையை நம்புகிறது மற்றும் இலங்கையின் பிரதமராக ரணில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதற்கு இணங்க ஜனநாயக செயல்முறைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறோம்’ என்று உயர் ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.
மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர், இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அதன் முதல் எதிர்வினையாக, செவ்வாய்கிழமை இந்தியா, நாட்டின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு ‘முழு ஆதரவளிப்பதாக’ இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேலும்,’ஜனநாயக செயல்முறைகள் மூலம் வெளிப்படுத்தப்படும் இலங்கை மக்களின் சிறந்த நலன்களால் இந்தியா எப்போதும் வழிநடத்தப்படும்’ என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
‘எங்கள் அண்டை நாடு முதல் கொள்கைக்கு இணங்க, இலங்கை மக்களுக்கு அவர்களின் தற்போதைய சிரமங்களை சமாளிக்க உதவுவதற்காக இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆதரவை இந்தியா வழங்கியுள்ளது.
கூடுதலாக, உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையைத் தணிக்க இந்திய மக்கள் உதவி வழங்கியுள்ளனர், ‘என்று இந்திய தெரிவித்துள்ளது.