நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்கள் பதிவாகியுள்ளன.
நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசவாசிகள் அவேந்திரா ஹோட்டலை சூறையாடியதையடுத்து இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதேச அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் கூடிய குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகள் மீது கொள்ளையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக டுவிட்டர் தளத்தில் மூத்த ஊடகவியலாளர் ரங்க சிறிலால் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவென்ரா கார்டன்ஸ் மற்றும் கிராண்டீசா ஹோட்டல்களுக்கு அருகில் உள்ள சாலைகளில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போது நீர்கொழும்பு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.