ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்கு பின்பு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் சர்வதேச ஆதரவைக் கோரியுள்ளனர்.
நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 1,500 பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாழடைந்த, பெரும்பாலும் சேற்றில் கட்டப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் புதைந்துள்ளதுடன் தென்கிழக்கு பக்திகா மாகாணம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அவசரகால தங்குமிட வசதிகள் மற்றும் உணவு உதவிகளை வழங்க ஐ.நா. உதவ முன்வந்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் முற்றிலும் அழிந்த கிராமங்கள், பாழடைந்த சாலைகள் மற்றும் மொபைல் போன் கோபுரங்கள் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அவர்கள் அச்சம் இருப்பதாக உயிர் பிழைத்தவர்கள் மற்றும் மீட்பவர்கள் பிபிசி செய்திதளத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இரண்டு தசாப்தங்களில் நாட்டைத் தாக்கும் மிக மோசமான நிலநடுக்கம், இதுவாகும். மேற்கத்திய ஆதரவு அரசாங்கம் சரிந்த பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றிய இஸ்லாமிய இயக்கமான தலிபானுக்கு ஒரு பெரிய சவாலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம்: பிபிசி)