இந்தியாவின் அதானி குழுமத்திற்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

Date:

மன்னாரில் இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி வர்த்தக வளாகத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் ‘கோட்டா கோ கம’ என்ற அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுவினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காற்றாலை மின் திட்டம் நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனக்கு கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கிறார் என்று ஜனாதிபதி கோட்டாபய  தனக்குத் தெரிவித்ததாக,இலங்கை மின்சார சபையின் தலைவர் சி பெர்டினாண்டோ, நாடாளுமன்றக் குழு முன்னால் கூறிய மூன்று நாட்களுக்குப் பிறகு, 2022 ஜூன் 14 அன்று பதவி விலகினார்.

இந்தநிலையிலேயே இலங்கைக்கும் இந்தியாவில் அதானி குழுமத்திற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் இரகசிய கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பம்பலப்பிட்டி மெஜஸ்டிக் சிட்டி முன்னால் ஆரம்பித்த பேரணி, மின்சார சபைக்கு முன் வந்த பின்னர், அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...