கோட்டைக்கு அருகில் பயணிக்கவிடாமல் ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்!

Date:

கொழும்பு கோட்டை பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நடாத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முதிலிகே மாவத்தையில் உள்ள வங்கிக்கு தானும் மேலும் மூன்று பெண்களும் செல்ல முற்பட்ட வேளையில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்தி வீதியை மறித்ததாக ஹிருணிகா பிரேமச்சந்திர குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஊடகவியலாளரும் செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை காண வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குச் செல்லும் வீதிகள் தடை செய்யப்பட்டுள்ளதால் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை  சமூக ஊடகத்தில் ஹிருணிகா பிரேமச்சந்திர அதே வீதியில் அமைந்துள்ள ஒரு வங்கிக்கு வந்ததாகக்  பதிவிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பொலிசார் உடனடியாக தடுப்புகளை வைத்து, பொது மக்களுக்கு திறந்திருந்த போதும், சாலைக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தன்னை நுழைய விடாமல் பொலிசார் தடுத்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...