‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’: பிரதமர் இல்லத்து அருகில் ஹிருணிகா தலைமையில் பெண்கள் போரராட்டம்

Date:

கொழும்பில் ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

‘ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது’ எனவும் தெரிவித்து குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திற்குச் சென்றதால் தர்ஸ்டன் கல்லூரி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களும் ஹிருணிகாவும், ‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’ என்று கோரி தரையில் அமர்ந்து கொண்டதாகவும் அதுவரை அசையப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூடுதல் பாதுகாப்புடன் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் தற்போது தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...