வௌிநாட்டு எண்ணெய்க் கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

எரிபொருளை உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.’

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எரிபொருளை இறக்குமதி செய்யும் திறன் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் முதல் சில மாதங்களுக்கு செயல்படும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சேவைக் கட்டணத்திற்கு உட்பட்டு எரிபொருள் இருப்புக்களை சேமித்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பங்களிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

LIOC  மற்றும் தெரிவு செய்யப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு தற்போதுள்ள 1190 நிரப்பு நிலையங்கள் மற்றும் புதிய விற்பனை நிலையங்களை சிபெட்கோ வழங்கும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...