அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்: பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்!

Date:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஏனென்றால், மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பஞ்சாப் உள்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது ஒரு பாரிய சமூகப் பிரச்சினை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தில் தினமும் ஐந்து அல்லது ஆறு கற்பழிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாலியல் துன்புறுத்தலுக்கு இடமளிக்கக்கூடாது, ‘என்று பஞ்சாப் உள்துறை அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

எனவே , பாலியல் வழக்குகளை சமாளிக்க அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாட் டாயத்திற்கு அரசு உட்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் தினமும் நான்கைந்து பாலியல் சம்பவங்கள் பதிவாகி வருகிறது.

இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு பரிசீலித்துத் வருகிறது.

பெண் பாதுகாப்பின் முக்கியத்துத்வத்தை பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்களைக் கண்காணிக்க பொது மக்கள், பெண்கள் அமைப்புகள், ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தப்படும்.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள்கள் பயன்படுத்துத்வது நாகரிகமாக மாறி வருகிறது. இது பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

எனவே பாலியல் பலாத்கார எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும், அங்கு பா லியல் துன்புறுத்தல்கள் குறித்துத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...