அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி ஏற்பட்டுள்ள போதிலும், பாராளுமன்றத்தை புறக்கணிக்க நாம் தயாரில்லை என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, மக்கள் சார்பில் நாடாளுமன்றம் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தை விட்டு வெளியேறுவதற்கு தாம் தயாரில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை சந்தர்ப்பம் கிடைக்கும் போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக எப்போதும் முயற்சிப்பதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.