ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் உயர்தர ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்களுக்கான திருத்த வகுப்புகள் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை பாடசாலைக் கல்வியை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படும் எனவும் இவ்வாரம் பாடசாலை செயற்பாடுகளை ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை அடுத்த வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர முடிந்தால் பாடசாலை நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
நேற்றைய தினம் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்தமை தொடர்பில் மாகாண மட்டத்தில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார்.